மல்லிப்பட்டினத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு எஸ்டிபிஐ கட்சியினர் உதவிக்கரம்.!

 


எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் GP கமிட்டி சார்பில் அண்மையில் அடித்த சூறாவளி காற்றினால் சேதமடைந்த வீட்டின் மேற்கூரை சரிசெய்து கொடுக்கபட்டது!

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம், சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகரில், நேற்று ஏப்-27 காலை பலத்த காற்றுடன் கூடிய பெய்த கனமழையால் அந்த பகுதியில் வசித்த ஒருவரின் வீட்டு மேற்கூரை அடித்து செல்லப்பட்டு சேதமடைந்ததையறிந்த மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து பார்வையிட்டு SDPI கட்சி சார்பில் அதை சரி செய்து கொடுக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், மேற்கூரை சரிசெய்யப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post