தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள்சூரை (50), இவர் வெளிநாடுகளிலும், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அயல்பெண்ணுடன், அருள்சூரைக்கு நெருக்கம் ஏற்பட்டது.
அதில் அந்த பெண் கர்ப்பமானதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த பெண் முத்துப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த கடந்த 9ம் தேதி பெண்ணுக்கு திருத்துறைப்பூண டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர்.
பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கன்னிகா அந்த பெண்ணின் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வீரக்குறிச்சியை சேர்ந்த தொழிலதிபர் அருள்சூரையைத் தேடி வருகின்றனர்
Post a Comment