துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும் மற்றும் அமீரக பாதுகாப்புப் அமைச்சருமான உயர்திரு ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிகாரப்பூர்வ அழைப்பை தொடர்ந்து, இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு துபாய் பட்டத்து இளவரசர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே இருக்கும் நல்லுறவை மேம்படுத்தவும், பல்வேறு மூலோபாய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை வலுப்படுத்த இந்திய மூத்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
Post a Comment