தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிளை ஏற்பாட்டில் அதிராம்பட்டினம் கல்லூரி அருகில் தவெக சார்பில் கோடையில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் செந்தூர்குமரன் முன்னிலையில்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி மதன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் ராபின்சன்,பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் விக்னேஷ்வரன்,பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய பொருளாளர் நிகிலன்,அதிரை நகர இணைச் செயளாலர் நாகராஜன்,பயிற்சி பாசறை அணி பொறுப்பாளர் பேரா ஆனந்த்,இணையதள அணி பொறுப்பாளர்கள் சசி, கலைவாணன்,மகளிர் அணி பொறுப்பாளர் பாத்திமா கனி,கிரிஜா ,நதியா,உஷா,கார்த்திகா,ஒன்றிய மகளிர் நிர்வாகி பவித்ரா,ஒன்றிய மகளிர் நிர்வாகி சுரேகா பழஞ்சுர் பூத் செயலாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒன்றிய செயற்குழு முத்துக்குமரன்,கிளை செயலாளர் ஷியாம் சுந்தர்,பூத் செயலாளர் சரண் குமார்,மனோஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர்,தர்ப்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.
Post a Comment