தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் லயன்ஸ் குப்பாஷா தலைமையில் 25 நபர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
மே.1 தொழிலாளர் தினத்தையொட்டி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த 25 நபர்களை சால்வை அணிவித்து இந்நிகழ்ச்சியை லயன் முகமது ஷெரிப்,லயன் டாக்டர் அசன் முகைதீன் ஆகியோர் ஒருங்கிணைத்து கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் தலைவர், இயக்குனர் லயன் எ. எ.முகமது அன்சாரி, முதல் நிலைத் தலைவர் லயன் கோபால கிருஷ்ணன், லயன் முகமது அபுபக்கர், லயன் ரஜப் முஹைதீன், லயன் கந்தசாமி, பொருளாளர் லயன் சாகுல் ஹமீது, நாகர் கோவில் கோட்டார் சங்கத்தில் இருந்து வந்து இணைந்த லயன் டாக்டர் அசன் முஹைதீன்- லயன் மஹபூபா அசன்முஹைதீன், லயன் ஹதிஜான அகமது கபீர் கலந்து கொண்டார்கள்.
Post a Comment