தஞ்சை மாவட்டம், சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெருவில் கடந்த 12 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை.
குடிநீர் வினியோகம் நிறுத்தம் பற்றி சம்பந்தப்பட்ட பணியாளரை கேட்டபொழுது, குடிநீர் விநியோகம் செல்லும் பைப் உடைந்து இருக்கும் காரணத்தினால் , விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.
ஆனால் 12 நாட்களாக உடைந்த அந்த பைப்பை சரி செய்யாமல் இன்றுவரை குடிநீர் விநியோகம் இல்லாமல் திப்பு சுல்தான் தெருவை சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
குடிநீருக்காக பொதுமக்கள் பேருந்து நிலையம் சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலம் நீடித்து வருகிறது.
மேலும் அவர்களின் தண்ணீர் தேவைக்காக நீண்ட துாரம் சென்று தலைலையில் தண்ணீர் துாக்கி வந்தும்,தள்ளுவண்டி கொண்டும் குடிநீர் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
Post a Comment