SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு நேற்று (மே.29) அதிரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷாவும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாக மாற்றங்கள், கட்சியின் கட்டமைப்பு பற்றி விரிவான ஆலோசனை நடைபெற்றது. இதன் இறுதியில் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக அதிரை புகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சியின் மாவட்ட நிர்வாக பொதுச் செயலாளராக மதுக்கூர் அசார் மற்றும் மாவட்டத் துணைத் தலைவராக மல்லிப்பட்டினம் நிஜாமுதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Post a Comment