மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!

 


தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடைவீதியில் கோடைகாலத்திற்காக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.திறப்பு விழாவையொட்டி மோர் மற்றும் தர்பூசணி பழம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.

மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கமிட்டி  தலைவர் ஜவாஹீர்,கமிட்டி  செயலாளர் ஹாமீம் பைசல்,இணைச்செயலாளர் பாவா முகைதீன்,மல்லிப்பட்டினம் கிளை-2 தலைவர் நூருல் இஸ்லாம்,செயலாளர்  அப்துல்லாஹ், இணை செயலாளர் ரஹ்மான்கான், கிளை-1 செயலாளர்  ஜெய்னுல் ஆபீதீன், பொருளாளர்  சம்சுன் குதா ஆகியோர் 200 க்கு மேற்பட்டோர்க்கு மோர்,தர்பூசனி வழங்கினர்.





Post a Comment

Previous Post Next Post