அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அனைத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

 


எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து தலைவர்கள் சந்திப்பு கூட்டம் அதிரை எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வைத்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்  நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் அசாருதீன் அனைவரையும் வரவேற்று பேசி தொகுத்து வழங்கினார். மாவட்ட நிர்வாக பொது செயலாளர் முஹம்மது புஹாரி கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா சிறப்புரை வழங்கினார். 

இக்கூட்டத்தில் வார்டு சம்பந்தமான விஷயங்கள், உள்ளூர் பொது மக்களின் கோரிக்கைகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் சேதுபாவா சத்திரம் ஒன்றிய துணைத்தலைவரும் செந்தலை கிளைத் தலைவருமான அன்வர், ஒன்றிய செயலாளர் முஹம்மது வஹி மன்சூர், ஒன்றிய இணை செயலாளர்  சத்திரம் கிளைத் தலைவர்  கலீல், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் முஸ்தபா, அதிரை நகரத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், செயலாளர் பாரிஸ் அஹமது, மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹிர், மதுக்கூர் நகர செயலாளர் பிலால், பட்டுக்கோட்டை கிளை தலைவர் பீர் முஹம்மது, செயலாளர் அந்துவான், அதிரை கிளை-2 தலைவர் அபுல் ஹசன், அதிரை கிளை-1 செயலாளர் கலிஃபுல்லாஹ், அதிரை கிளை-3 தலைவர் இப்ராஹிம், தொண்டரணி தலைவர் ரிஸ்வான், மல்லிப்பட்டினம் கிளை-1 தலைவர் இப்ராம்ஷா மற்றும் மல்லிப்பட்டினம் கிளை-2 செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயலாளர் பாரிஸ் அஹமது நன்றி கூறினார்.




Post a Comment

Previous Post Next Post