விமான பயணிகளுக்கு கவனத்திற்கு..!! இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு..!!

 


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதட்டம் காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இந்தியாவின் சிவில் விமான பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பதட்டம் காரணமாக, இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள 27 விமான நிலையங்கள் பின்வருமாறு:

ஜம்மு & காஷ்மீர்: ஸ்ரீநகர், ஜம்மு, லே

பஞ்சாப்: அமிர்தசரஸ், சண்டிகர், லூதியானா, பட்டியாலா, பாதிந்தா, ஹல்வாரா, பாதான்கோட்

ஹிமாச்சல் பிரதேசம்: ஷிம்லா, காகல், தரம்சாலா, பூந்தர்

ராஜஸ்தான்: ஜெய்சல்மீர், ஜோத்பூர், பிகானீர், கிஷன்கர்

குஜராத்: புஜ், ஜாம்நகர், ராஜ்கோட், முண்ட்ரா, போர்பந்தர், கண்ட்லா, கேஷோட்

மத்திய பிரதேசம்: க்வாலியர்

உத்தரப்பிரதேசம்: ஹிண்டன்

இந்த விமான நிலையங்கள் மே 10, 2025 காலை 5:29 மணி வரை மூடப்பட்டுள்ளன.

இந்த அனைத்து விமான நிலையங்களும், மே 10, 2025 காலை 5:29 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், 430க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள், விமான நிலையங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.

மேலும், பாதுகாப்பு காரணங்களால் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளவும், பயணிகள் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post