பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் 4 வழிச சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலையை கொண்டுவர தீவிர முயற்சி நடந்து வருகிறது. பட்டுக்கோட்டை முதல் தஞ்சாவூர் வரை இரு வழிச் சாலையாக இருந்த பாதை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது, இதற்கான முதற்கட்ட பணிகளான சாலை அகலப்படுத்துதல், சிறு குறுபாலங்கள் கட்டுதல், சாலை ஓரம் உள்ள மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் பெருமளவு முடிந்து விட்டது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகள், பள்ளம் தோண்டுதல், ஜல்லி நிரப்புதல் போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மாநில நெடுஞ்சாலை கழகம் முதல் பட்டுக்கோட்டை வரை தலைமைப்பொறியாளர் வழிகாட்டுதல்படியும், தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர்
அறிவுறுத்தல்படியும் நான்கு வழிச்சாலைசாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இச்சாலை முழுவதும் அகலப்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு(2026) ஜனவரி மாதத்துக்குள் பணி முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Post a Comment