பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு. கோ.வி. செழியன் இணைந்து கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வியூகம் அமைத்து செயல்படுவது - கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வது - தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நம் தலைவர் மேற்கொண்டு வரும் சட்டப் போராட்டங்களை பொதுமக்களிடத்தில் விளக்கிக் கூறுவது உள்ளிட்டவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் திரு. பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.அசோக்குமார், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு. துரை. சந்திரசேகரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் செந்தில் குமார், ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகர - மாவட்ட - பகுதி - நகர - பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
Post a Comment