துபாய் பட்டத்து இளவரசரும், அமீரகத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான உயர்திரு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள், அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் இராணுவப் பிரிவுகளை ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, தளத்தை சுற்றிப் பார்த்த பட்டத்து இளவரசர், அங்குள்ள பயன்பாட்டின் கட்டளைகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் தொடர்பான அனைத்து விவரங்களும் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் ஆதரவால் இயக்கப்படும் விமானப்படை மற்றும் விமானப் பாதுகாப்பின் முன்னேற்றத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று கூறினார்.
மேலும், விமானப்படை மற்றும் விமான பாதுகாப்புத் துறையில் உள்ள அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
Post a Comment