மீனவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8000 வங்கியில் செலுத்தும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்பிடி தடைகால நிவராணம் வழங்கும் நிகழ்ச்சி மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரகம் அலுவலகத்தில் நடந்தது.
மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்களுக்கு ரூ.8000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.மீன்பிடி தடைகால உத்தரவு ஒருமாதம் பூர்த்தியாகும் வேளையில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமலே இருந்தது, இந்நிலையில் இந்த மீன்பிடிகால நிவராண உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இதில் மீன்வளத்துறை ஆணையர் கஜலட்சுமி,தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment