பேராவூரணியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாட்டம்.!

 


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழா பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது..

இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் சேகர் தலைமை ஏற்றார்.பேராவூரணி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.இளங்கோ வரவேற்புரையாற்றினார்.

முன்னாள் அமைச்சர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ்,முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் வளர்மதி சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்கள்.

அமைப்புச் செயலாளர் துரை.செந்தில் மாநில விவசாய பிரிவு இணைச்செயலாளர் மா.கோவிந்தராசு,எம்ஜிஆர் இளைஞர்அணி இணை செயலாளர் ஜவகர்பாபு,மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம்,மாநில இலக்கிய அணி இணை செயலாளர் திலீபன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம்,திருவோணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மதியழகன்,பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் மலை.முருகேசன், மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றிய நிர்வாகிகளும் முன்னிலை பொறுப்பு வகித்தனர். 

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை ஒட்டி கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது..

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளும் பொதுமக்களுக்கு தென்னைமர கன்றுகளும், 

 தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற ஏழு மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக கொங்கு தமிழ் கோகிலம் பாரிஸ்ராஜா, காரைக்கால் ஜார்ஜ் குழுவினரின்  இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. 

பேராவூரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஊ.துரைமாணிக்கம்  நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.







Post a Comment

Previous Post Next Post