தஞ்சை மாவட்டம் மமக தமுமுக மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமுமுக மமக புதிய மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மமக பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது கலந்து கொண்டு பேசினார்.
தமுமுக-மமக மாவட்டதலைவராக மதுக்கூர் புரோஸ்கான்,
மமக மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் பஹத்,
தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை இத்ரிஸ் அகமத்,
மாவட்ட பொருளாளர் பட்டுக்கோட்டை ஜெகபர் அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
இதில் புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும் புதிய நிர்வாகத்தினுடைய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. வக்பு தொடர்பான விழிப்புணர்வுகளை மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் கூறப்பட்டன.
இதில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர்,கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment