மல்லிப்பட்டினம் சுற்றுலா வந்த இளைஞர்கள் மீது தாக்குதல் எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கண்டனம்.!

 


மல்லிப்பட்டினம் சுற்றுலா வந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்  ரியாஸ் அகமது அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

24.05.2025 அன்று முத்துப்பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு  சுற்றுலா வந்துள்ளனர். இருசக்கர வாகனம் காரின்  மீது மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த  சமுக விரோதிகள் மத பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் சுற்றுலா வந்த இளைஞர்கள் மீது சரமாரியாக  மதத்துவேச வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி தாக்கியுள்ளனர்.

இச்செயலை SDPI கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க SDPI கட்சி பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களோடு காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்க SDPI வலியுறுத்துகிறது.

மேலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும்,சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கும் விதமாகவும் பாசிச சிந்தாந்ததை கொண்ட சமூக விரோதிகள் இனி  இதுபோன்ற செயல்களில் ஈடுபடமால் இருக்க நடவடிக்கைகள் எடுக்கும்படியும்,

சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுலா வரும் பொதுமக்களை பாதுகாப்பை உறுதி செய்யும் படியும் SDPI கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post