சேதுபாவாசத்திரம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெரு,சின்னமனை ஆகிய பகுதிகளில் குடிநீர் வராமல் பொதுமக்கள் பேருந்து நிலையம் சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலம் நீடித்து வருகிறது.
குடிநீர் ஏற்றும் மின் மோட்டார் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவர்களின் தண்ணீர் தேவைக்காக நீண்ட துாரம் சென்று தலைலையில் தண்ணீர் துாக்கி வந்தும்,தள்ளுவண்டி கொண்டும் குடிநீர் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
Post a Comment