எஸ்டிபிஐ கட்சியின் நாகை நகரத் தலைவர் பஜூலுல் அவர்களுடைய மகனின் திருமண விழா திருவாரூர் மாவட்டம் கச்சனத்திலும் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் ஜமால் முகம்மது இல்லத் திருமணம் திருவாரூரிலும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விரு நிகழ்வுகளிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில நிர்வாக பொது செயலாளர் எம். நிஜாம் முகைதீன் திருமண வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மண்டலத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, திருவாரூர் மாவட்டத் தலைவர் மாஸ் அப்துல் அஜிஸ், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் லத்தீப், திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜாஸ்மின், நாகை மாவட்ட துணைத் தலைவர் அக்பர், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் நிஜாமுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக பொது செயலாளர் முஹம்மது புஹாரி, எஸ்டிபிஐ கட்சியின் தகவல்நுட்ப அணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜாசிம் இலாஹி, கூத்தாநல்லூர் நகரத் தலைவர் ஜாஹிர் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment