பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது.? எட்டு மாதம் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக மல்லிப்பட்டினம் பொதுமக்கள் வேதனை..!



 தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் டெண்டர் கோரப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் சாலை அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை.

மல்லப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் உள்ள 120மீட்டர் சாலை பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் கரடு,முரடான பாதையாக மணல் சாலையாக காட்சியளிக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின் போது அப்பகுதி குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர்.அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான 120 மீட்டருக்கு சாலை அமைத்து தரப்படும் என ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் மல்லி நியூஸ் வாயிலாக அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் டெண்டர் கோரப்பட்டுவிட்டதாக வாக்குறுதி அளித்து எட்டு மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது எனவும்,அடிப்படை தேவைகள் ஆண்டிக்காடு ஊராட்சியில் இருந்தும் இல்லாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அளித்த வாக்குறுதியின்படி அப்பகுதிக்கு சாலையும்,அந்த தெருவின் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியோடு இணைக்க சட்டமன்ற கூட்டத்தில் பேச வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .

சட்டமன்ற உறுப்பினர் எட்டு மாதத்திற்கு முன்னர் அளித்த பேட்டி..






Post a Comment

Previous Post Next Post