தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிபட்டினத்தில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்திற்காக வருகை தந்திருந்த அமைச்சர் கோவி. செழியனிடம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மல்லிப்பட்டினம் சார்ந்த கோரிக்கை மனு வழங்கினர்.
மல்லிப்பட்டினத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருப்பதால் அதனை இரண்டாக பிரித்து புதுமனைத் தெருவில் புதிய ரேஷன் கடை அமைதி தர வேண்டியும்,மல்லிப்பட்டினம் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பெண்கள் பொதுமக்கள் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளார்கள் ஆதலால் நிழற்குடை அமைத்து தர வேண்டிய கோரிக்கை மனு அமைச்சர் கோவி.செழியனிடம் மனு வழங்கப்பட்டது.
மனுவை பார்த்த அமைச்சர் சரியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதில் மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகது, கிளை தலைவர் புகாரி,தமுமுக செயலாளர் பைசல்,சமூக நீதி மாணவர் இயக்க கிளை செயலாளர் நசீம்,அசாருதீன் ஆகியோர் மனு அளித்தனர்
Post a Comment