மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு இளைஞர்கள் மல்லி நியூஸ்க்கு விருது வழங்கி கௌரவிப்பு.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு இளைஞர்களால் நடத்தப்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் ஊடகப்பணியில் சிறந்த பங்களிப்பும்,ஷாபி இமாம் தெரு மக்களின் அடிப்படை தேவைகளை அரசுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பலமுறை ஊடகத்து வெளிச்சத்தோடு Malli News வெளிப்படுத்தியதை கௌரவிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகள் இன்னும் அதிகமான மக்கள் பிரச்சனைகளை அரசுக்கும்,அதிகாரிகளுக்கும் எடுத்துரைக்க வைக்க உத்வேகம் அளிக்க கூடியதாக இருக்கும், மேலும் பொது நலன் சார்ந்த பிரச்சனைகளை வெளி உலகிற்கு கொண்டு சேர்ப்பதில் மல்லி நியூஸ் தயக்கம் காட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த விருதினை வழங்கி கௌரவித்த ஷாபி இமாம் தெரு மல்லிப்பட்டினம் இளைஞர்களுக்கு மல்லி நியூஸ் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


மல்லி நியூஸ்

Post a Comment

Previous Post Next Post