தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கே மனோரா சுற்றுலா தளங்கள்,தஞ்சை மாவட்டத்தின் மிகப்பெரிய இருப்பதால் பகுதி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
இந்த நாய்கள் வெறி பிடித்து சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோரை துரத்திச்சென்று கடிப்பதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். மல்லிப்பட்டினம் பகுதியில் நாய்கள் சுற்றி திரிவதோடு, மக்களை துரத்துகிறது. பொது மக்களின் நலன் கருதி, ஊராட்சி அதிகாரிகள், தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment