*மத்திய சென்னை தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தெஹ்லான் பாகவி:*
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக வுடன்
sdpi கட்சிககூட்டணி வைத்து உள்ளது . அதில் sdpi கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது.
இத் தொகுதியின் வேட்பாளராக SDPI கட்சியின் தேசியத் தலைவர் இமாம் KKSM தெஹ்ரான் பாகவி அவர்கள் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இவர் அரசியலில் கடந்து வந்த பாதை பிடித்து கீழே காண்போம் ..!!
வேலூர் அல்-பாக்கியாத்துஸ் சாலிஹாத் அரபிக்கல்லூரியில் பயின்று பாகவி பட்டத்தை முடித்து, கால் நூற்றாண்டு காலமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றார். துவக்க காலத்தில் இருந்தே மக்களுக்கான சமூக சேவைகள் மூலம் தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகின்றார்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் உறுப்பினராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றார். பல்வேறு சமூக இயக்கங்களில் மாநில மற்றும் தேசிய நிர்வாகியாக பொறுப்பு வகித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில், ‘பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை’ என்ற முழக்கத்தோடு 2009ல் தேசிய அளவில் துவங்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின், தமிழ் மாநில தலைவராக தனது அரசியல் பணியை துவங்கினார். தற்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவராக இருந்து மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
மதவாதத்துக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் தனது தலைமையில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதுமட்டுமின்றி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் நலனை காக்கவும், தமிழக உரிமைகளை காக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்.
மீனவர்களின் நலனுக்கான போராட்டத்திலும், விவசாயிகளையும், விவசாயத்தை காக்கும் போராட்டக் களத்திலும், இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதற்கு எதிரான மக்கள் நலன் சார்ந்த போராட்டக் களத்திலும் முன்னின்று செயலாற்றி வருகின்றார்.
கூடங்குளம் அணு உலை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற நாசகார திட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து களமாடி வருகின்றார்.
தாமிரபரணி நதியை ஆக்கிரமிப்பிலிருந்தும், பன்னாட்டு ஆலைகளிடமிருந்தும், ஆலைக் கழிவுகளிலிருந்தும் காக்க வலியுறுத்தி, மாபெரும் நடைபயணத்தை மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடங்கி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வரை பல்வேறு போராட்டங்களை கண்ட ஒரு மக்கள் போராளியாக வலம் வருகின்றார்.
நதிகளை பாதுகாக்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தினார்.
மக்களை நிம்மதி இழக்கச் செய்த பணமதிப்பிழப்பிற்கு எதிராகவும், சிறு-குறு தொழில்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை விரக்திக்குள்ளாக்கிய ஜி.எஸ்.டி. வரிக்கெதிராய், எளியோருக்கான மருத்துவக் கல்வியை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் முன்நின்றவர். இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் முன்னணியில் நின்று களமாடி வருகின்றார்.
சேவை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அவர் தவறியதில்லை.
சென்னையை வரலாறு காணாத மழை-வெள்ளம் சூழ்ந்த போது, முதல் ஆளாய் களத்தில் நின்று இரவு, பகல் பாராது மக்களை காக்கும் பணியிலும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும் முன்னின்று பணியாற்றினார்.
தமிழகத்தை தாக்கிய வர்தா, ஓக்கி, கஜா போன்ற புயல்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, களத்தில் நின்று பணியாற்றினார்.
தமிழகம் தாண்டி, தமிழக நலன் காக்க விவசாயிகள் டெல்லியில் போராடிய போது விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு கரம் நீட்டினார்.
பரிசுத்தமான வாழ்க்கைக்கு சொந்தக்காரரான இவர், எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தற்போதுவரை ஈடுபட்டு வருகிறார்.

Post a Comment