அறுந்துகிடக்கும்_மின்கம்பி_உடனடியாக_சரி_செய்யுமாமின்வாரியம்...!


மல்லிப்பட்டிணம் ராமர் கோவில் தெரு பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.இந்த மின்கம்பியானது மெயின் லைன் ஆகும்.பொதுமக்கள், சிறுவர்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காலை நேரத்தில் விழுந்து இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு ஊர் நலன் விரும்பிகள் உடனடியாக சென்று மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மின் வினியோகத்தை நிறுத்தம் செய்தனர்.ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும் இதேப்போல் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து இருக்கிறது, விழுகின்ற சூழலில் இருக்கிறது. மல்லிப்பட்டிணத்தில் கஜா புயலால் சேதமடைந்த அனைத்து மின்கம்பிகளையும் மாற்றி புது மின்கம்பிகளில் இணைப்புக் கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கை ஆகும்.

Post a Comment

Previous Post Next Post