உலக சாதனை முயற்சியாக தமிழகம் முழுவதும் பனை விதை விதைக்கும் இளைஞர்கள்


தமிழகம் முழுவதும் கடந்த (செப்22) ஞாயிற்று கிழமை அன்று ஒவ்வோரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் முயற்சியில் இல்லக்கில்லா பனை விதை விதைக்கும் உலக சாதனை நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இந்த உலக சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் உள்ள பெரியகுட்டைபுத்தூர் மற்றும் திங்களூர் புளியம்பட்டி குளத்திலும் 2500க்கும் மேற்பட்ட பனை விதைகள் ”மாண்புமிகு மரங்கள் குழுவின்” சார்பாக விதைக்கபட்டது. இந்த பனை விதை விதைக்கு நிகழ்ச்சியில் பல தன்னார்வர்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பனை விதை விதைக்கும் நிகழ்வினை மிகவும் சிறப்பாக நிகழ்த்தியுள்ளார்கள். உலக சாதனை நிகழ்வு ஒருபுறம் இருக்கட்டும் ஏன் இவர்கள் பனையினை தேர்வு செய்தார்கள் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழலாம். எதற்கு உலக சாதனை நிகழ்வுக்கு பனை பார்க்கலாம். பனை விதை தேர்ந்தேடுப்பதன் நோக்கம்: பனைக்கும் நமது நிலத்திற்கும் மிகவும் தொடர்பு உள்ளது. அதன் காரணமோ என்னமோ தமிழகத்தின் மாநில மரம் பனை மரத்தை தேர்ந்தேடுத்துள்ளர். சரி இனி நாம் பனை விதை தேர்ந்தேடுப்பதனின் நோக்கத்தைப் பற்றி பார்ப்போம். பனை மரம் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவிரப் பேரினம் வகையினை சார்ந்தவை. பனை மரத்தினை பொதுவாக பயிரிடுவதில்லை, காரணம் இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகும் தன்னை கொண்டது பனை. அது மட்டுமின்றி பனை விதைகள் விதைப்பதால் அதன் வேர்கள் நீண்ட ஆழம் சென்று நலத்தடிநீர் மட்டம் குறையமல் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் வளர்ச்சி போன்று தான் பனையின் வளர்ச்சியும் இயற்கையில் அமைந்துள்ளது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. சாதரணமாக பனை மரம் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. குளங்கள் ஏரிகளின் கரைகளில் நடுவதால் கரைகள் பலமடையும், புயல் மழை எது வந்தாலும் நிலைத்து கம்பீரமாய் நிற்கும் தன்மை கொண்டது. மேலும், வரட்சியிலும் வளரக்கூடியது. தற்போது தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனை அறிந்த தமிழக இளைஞர்கள் பனையின் எண்ணிகையை அதிக படுத்தும் நோக்கமாக இந்த பனை விதை விதைக்கும் உலக சாதனையாக நிகழ்த்தியுள்ளார்கள் நமது இளைஞர்கள். சென்னையில் பனை விதை: ”வரும் காலம் நமது இளைஞர்களின் கையில் உள்ளது” என்று அப்துல் கலாம் ஐயா கூறியது போல், இன்று நம் இளைஞர்களின் முயற்சியினால் உலக சாதானை நிகழ்ந்துள்ளது. ‌இந்த உலக சாதனையின் நிகழ்வில், தமிழகம் முழுவதும் சுமார் மூன்று லட்ச்சத்திற்கு மேறப்ட்ட இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் இயற்கையை காக்க ஒன்றிணைந்து இந்த உலக சாதனையினை நிகழ்த்தியுள்ளார்கள். இந்த உலக சாதனையின் நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் காக்கை அறக்கட்டளை, ழகரம் அறக்கட்டளை, அம்மன் போர்வெல், நல்ல உணவு அறக்கட்டளை, காக்கை பதிப்பகம் மற்றும் சினேகம் பவுண்டேஷன் போன்ற மொத்தம் கலந்து கொண்ட அமைப்புகள் எட்டு. சென்னையில் அனைவரையும் ஒருங்கிணைத்தது காக்கை அறக்கட்டளை. சென்னையில் நடைபெற்ற இந்த உலக சாதனையின் முயற்சியினால், இல்லக்கில்லா பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி சென்னை கடற்கரை பகுதியான மெரினா முதல் நீலங்கரை வரை கடற்கரை முழுவதும் இந்த பனை விதை விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வியில் பொது மக்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பல இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நம் பனை மரத்தை மீட்டு எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். பனை விதை நடுவது மட்டும் நோக்கமின்றி பனையின் பயன்களை அனைவருக்கும் தெரியும் வகையில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. பனை வளர பல ஆண்டுகள் எடுத்தாலும் அதன் பயன் நம் சந்ததிகளுக்கு மிகவும் பயன்யுள்ளதாகவே அமைகின்றது என்று அனைவருக்கும் புரியும் வகையில் தெரிவித்தார்கள். இயற்கையோடு வளர்ந்த நாம் முன்னோர்களின் வாழ்கையை நோக்கி இன்றைய தலைமுறை செல்கின்றது என்றால் மிகவும் மகிழ்ச்சி தான் மனதற்கு. இயற்கையை நேசித்தால் நம்மை என்றும் கை விடாது, அதற்கு சான்று இந்த உலக சாதனை பனை விதை விதைக்கும் நிகழ்வு. வணக்கம் அமெரிக்க சார்ப்பில் வாழ்த்துகிறோம் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று.

Post a Comment

Previous Post Next Post