தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் இணைந்து மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம், சின்னமனை ராமர் கோயில் மற்றும் கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்களுக்கும் கடற்கரை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் கொரோனா பரவல் மீண்டும் உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்தும்,அரசு அறிவுறுத்தும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வை வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், மருத்துவ அலுவலர் சேது,கிராம சுகாதார செவிலியர் மாலதி, சாத்தி தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பாளர்கள் நித்தேஷ், பிரபாகரன், அன்னலட்சுமி, ரேவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.




Post a Comment