எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டின் நகரம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நகர அலுவலகத்தில் பாவா முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் ஜவாஹீர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.மாநில மீனவர் அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
கூட்டத்தில் கட்சியின் துவக்க தினத்தையொட்டி வருகின்ற ஜூன்.21 அன்று கட்சி கொடியேற்றுதல்,மரக்கன்றுகள் நடுதல்.
பொதுத்தேர்வில் பத்தாம்,பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிப்பது.
கட்சியின் உறுப்பினர் சேர்க்கை,கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment