மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.!

 


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.



நாகை நம்பியார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர், இவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோர், உறவினர்கள் முன் வந்தனர்.

இதையடுத்து, பழனிவேலின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத் தப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post