பட்டுக்கோட்டையில் திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்




 பட்டுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் பணிக்குழு கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட் டுக்கோட்டை எம். எல். ஏவுமான அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, திக, மமக, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி வெற்றிக்கு திமுக கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து அயராது பாடுபடுவது. திமுக வேட்பாளர் முரசொலியை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் வடக்கு பார்த்திபன், தெற்கு சத்திய விஜயன், கிழக்கு முருகானந்தம், மேற்கு ராமநாதன், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரவிந்தகுமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post