மல்லிப்பட்டினத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக ஆலோசனை கூட்டம்.!

 


தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வினோத் பிரியா மண்டபத்தில் நடைபெற்றது.

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சட்டமஎன்ற உறுப்பினர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் தேர்தல் பணிகள், வாக்கு சேகரிப்பு,களப்பணிகள் போன்ற பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.இதில் தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாகிர்,தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணை தலைவர் தாஜூதீன்,மாவட்ட பிரதிநிதி ஹபீப் முஹம்மத்,மாவட்ட கவுன்சிலர் காமராஜ்,மல்லிப்பட்டினம் கிளை துணைச் செயலாளர் நூருல் அமீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள்,கூட்டணி கட்சியினர், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






Post a Comment

Previous Post Next Post