தஞ்சை மாவட்டத்தில் 471 ரவுடிகள் வீடுகளில் ரைடு.!




 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அலுவலக செய்திக்குறிப பில் கூறியிருப்பதாவது: தஞ்சை எஸ்பி ஆசிஷ் ராவத்

உத்தரவின்படி, கடந்த 29 ஆம் தேதி முதல், மாவட்டத்தின் பல பகுதிகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தஞ்சை, வல்லம், திருவிடைமருதுார், ஒரத்தநாடு, கும்ப கோணம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 471 பேரின் வீடுகள் சோதனை நடத்தப்பட்டு 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முன்பே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 19 பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 28 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 226 விடுதிகளில் தீவிர சோதனை நடந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post