தஞ்சை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் திமுக வேட்பாளர் முரசொலி.!

 



தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் முரசொலி ஓரத்தநாடு பகுதியில் கிராமம், கிராமமாக சென்று ஒட்டு சேகரித்தார்.


ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் தொடங்கி ஆயங்குடி, தெக்கூர், ஆதனக்கோட்டை பாச்சூர், ஆர்சுத்திப் பட்டு, பனையக்கோட்டை நெய்வாசல், பொன்னாப்பூர், குடிக்காடு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, நெல்லுப்பட்டு, காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது வேட்பாளர் முரசொலி பேசியது:
நான் எம்பியானால் அடித்தன மக்களின் கோரிக்கைள் நிறைவேற பாடுபடுவேன் குறிப்பாக பொதுமக்களின்
நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து ஓரத்தநாடு, தஞ்சை வழியாக அரியலூர் வரை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் அனைத்து விவாயிகளுக்கும் ஊக்கத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இந்த தொகை கிடைக்க பாடுபடுவேன் நெல் மற்றும் கருப்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
 கிராமங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களை ஏற்படுத்துவேன் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.
இவ்வாறு வேட்பாளர் முரசொலி பேசினார் திமுக மற்றும் கூட்டம் கட்சி நிர்வாகிகள் திரளானோர் உடன் சென்று ஒட்டு சேகரித்தனர்.

Post a Comment

Previous Post Next Post