மல்லிப்பட்டினம் வடக்கு தெருவில் மின்தடை பொதுமக்கள் அவதி.!

 


தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் வடக்கு தெரு பகுதியில் இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இதுவரை மின்சாரம் வரவில்லை.

ஏற்கனவே கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் திணறி வரும் பொதுமக்கள் இரவு நேர மின் தடையால் பெரிதும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மின் தடையால் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post