மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினரை நேரில் சந்தித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா ஆறுதல் கூறினார்.
கடந்த புதன்கிழமை பள்ளி வளாகத்திலே ஆசிரியை ரமணி மதன் என்பவனால் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து பலவேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.இந்நிலையில் இன்று(நவ.22) காலை மமக நிர்வாகிகள் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் கொலையாளியும்,ரமணியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்றும், யூடியூப்களில் தங்களின் பார்வையாளர்களை அதிகரிக்கும் வண்ணம் உண்மைக்கு மாறாக பொய்யான தகவல்களை பரப்புவதாகவும்,எங்களுக்கு இழப்பீடோ,அரசு வேலையோ நோக்கமல்ல மாறாக கொலையாளி மதனுக்கு உச்சபட்ச தண்டனை வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என்று மாநில துணைப்பொதுச்செயலாளரிடம் கூறினர்.
இதனை கேட்ட பாதுஷா அனைத்து வித சட்ட உதவிகளும் செய்து தருவதாகவும், மேலும் தேவைப்பட்டால் வழக்கறிஞரை கூட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நியமித்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இத்ரீஸ்,மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத்,தமுமுக மாவட்ட செயலாளர் மாலிக்,தமுமுக மாவட்ட துணை செயலாளர் இல்யாஸ்,மமக மாவட்ட செயலாளர் நெய்னா,மாவட்ட பொருப்பாளர் ஃபெரோஸ்,மல்லிப்பட்டிணம் கிளை தலைவர் புகார் மற்றும் கிளை நிர்வாகிகள், சமூக நீதி மாணவர் இயக்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Post a Comment