மல்லிப்பட்டினம் தொடக்கப்பள்ளி அருகே குப்பைகள் தேக்கம்,நோய் தொற்று பரவும் அபாயம்.!

 


தஞ்சை மாவட்டம்,சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவு வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியில்  குப்பைகள் அள்ளாமல் அப்படியே இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பை தொட்டி கீழே கவிழ்ந்து குப்பைகள் கீழே கொட்டி கிடக்கின்றன. இதனால் மருத்துவமனை,பள்ளிவாசலில் தொழுகைக்கு வருபவர்களுக்கு முகம் சுழிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.ஆகவே ஊராட்சி சார்பில் அப்பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி கிருமிநாசினி அடித்துவிட வேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post