தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சியில் வசிக்கும் வினோத் அவரின் இரண்டாவது குழந்தை செல்வன். தர்னிஷ் (வயது-18 மாதங்கள்) என்பவர் 14.12.2024 அன்று அவர்களது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது இரவு பெய்த கனமழையின் காரணமாக அருகிலுள்ள வடிகால் வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக சென்றதால் குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தமைக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை ரூ.4,00,000/-க்கான காசோலையினை செல்வனின் பெற்றோரிடம் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.அசோக்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாராஜன் அவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.மு.பாலகணேஷ் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சரவணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (24.12.2024) வழங்கினார்கள்.
சேதுபவாசத்திரம் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிவாரணம்.!
புதியவன்
0
Tags
தஞ்சை மாவட்டம்

Post a Comment