மல்லிப்பட்டினத்தில் மீனவர்களுக்கு கடற்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பருந்து கடற்படை வானூர்தியின் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 இராமநாதபுரம் பருந்து கடற்டை வானுர்தி சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோர விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பேரணி வாகனம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் வருகை தந்து மீனவர்களுக்கு கடலில் ஆபத்தான காலக்கட்டங்களில் மீனவர்கள் கையாள வேண்டியவை, படகுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டியவை,மீனவர்கள் வானிலை குறித்தான தெளிவு ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் கேப்டன் அர்ஜூன் மேனன் தலைமையில் பேரணியில் கடற்படை வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை ஆய்வாளர் வீரமணி,மீன்வள மேற்பார்வையாளர் சார்லஸ், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு தலைமை காவலர் ராஜா, விசைப்படகு மற்றும் நாட்டுபடகு சங்க நிர்வாகிகள் ஹபீப் முகமது,வடுகநாதன்,இப்ராகிம், முகமது ஜலாலுதீன், இளங்கோ, செய்யது முகமது, ரஹ்மத்துல்லா,முருகன் எழுத்தர் நீலகண்டன் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.









2 Comments

Post a Comment

Previous Post Next Post