தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் மஸ்ஜித் நூர் பள்ளிவாசலில் வைத்து நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது
இதில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
*பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது.
50 சதவீதத்துக்கு அதிகமாக முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவருகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துகளை தானம் செய்யக் கூடாது என்றும், முஸ்லிமாக இருந்தாலும் அவர் 5 ஆண்டுகளாவது இஸ்லாத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தேவையற்ற நிபந்தனைகளை கொண்டு வருகின்றனர்.
வக்பு வாரியத்தில் இருக்கும் சொத்துகளை கொள்ளையடிக்க வேண்டும், இதற்கு மேல் வக்புக்கு சொத்து சேர்ந்துவிடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொன்ன எந்த திருத்தத்தையும் சேர்க்காமல் ஆளுங்கட்சி சொன்ன திருத்தங்களை மட்டும் சேர்த்துள்ளனர் இந்த திருத்தங்களுக்கு சட்ட வடிவம் கொண்டுவந்தால் ஜனநாயக வடிவில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம்.
*திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள் வழிபாடு செய்ய கோயில் இருப்பதுபோல் இஸ்லாமியர்களுக்கான சிக்கந்தர் தர்கா உள்ளது தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக சமுக சீர்திருத்த கருத்துகலகளோடு எங்கள் அமைப்பின் சார்பில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம் !
அது வேறு பிரச்சினை பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் அந்த தர்காவுக்கு சென்று வருகின்றனர் முஸ்லிம்கள், இந்துக்கள் வழிபாடு செய்ய தனித்தனியாக வாசல்கள் உள்ளன
வட மாநிலங்களைப்போல் வழிபாட்டு தலங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செய்து வருகிறது இதற்கு ஒற்றுமையை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள் பலியாக மாட்டார்கள் மதுரை திருப்பரங்குன்ற சிக்கந்தர் மலையில் சங்க் பரிவார அமைப்புகள் பிரச்சினை செய்வதற்க்கு முந்தைய பழைய நடைமுறையே தொடரும் என்பதை உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியாரை முன்வைத்து சீமான் செய்யும் அரசியல் தேவையற்றது பெரியார் தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டுகள் அதிகம் இஸ்லாத்தை பற்றி பெரியார் சிறப்பித்தும் பேசியுள்ளார், விமர்சனமும் செய்துள்ளார்
விமர்சனம் செய்ததை மட்டும் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரானவர் பெரியார் என கட்டமைக்க முயற்சிக்கிறார்
பெரியாரிஸ்ட்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை கொம்பு சீவி விடும் வேலையை சீமான் செய்து வருவது தவறானது. தமிழ் தேசியத்துக்கு எதிரான இந்துத்துவாவை விமர்சிப்பதை விட்டுவிட்டு பெரியாரை பொது எதிரியாக பார்ப்பது பொருத்தமற்றது விமர்சனம் செய்வது வேறு, பொது எதிரியாக கட்டமைப்பது வேறு சீமான் பெரியாரையும், பெரியாரிஸ்ட்களையும் பொது எதிரியாக கட்டமைக்க முயற்சிக்கிறார் முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய பிரச்சினைகள் குறித்து சீமான் பேசினாரா? மதவாதம் தலைதூக்கும் வேளையில் அவர்களை பொது எதிரியாக கட்டமைக்க வேண்டுமே தவிர பெரியாரையும், பெரியாரிஸ்ட்களையும் பொது எதிரியாக கட்டமைப்பது தவறானது என தனது பேட்டியின் போது தெரிவித்தார் இந்நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அப்துல் சலாம், செயலாளர் ஜலாலுதீன், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் முகமது பிலால், காஜாமைதீன், பீர் மைதீன், அப்துல் பாசித், அணி நிர்வாகிகள் அப்துல்லா குட்டி ,தாவூத் மற்றும் கிளை நிர்வாகிகள் தலைவர்
சுலைமான்,செயலாளர்,மாலிக்,பொருளாளர் சித்திக், துணைதலைவர் மசூது துணைச் செயலாளர் அஜ்மல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு தவ்ஹீத் என்கின்ற அமைப்பு வக்பு வாரிய விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று அதன் இயக்கத்தின் மீது ஏதாவது கனி என்கின்ற நான் குற்றம் சுமத்துகிறேன் காரணம் ஒவ்வொரு இஸ்லாமியனும் அல்லாஹ்வுடைய சொத்துக்கள் பாதுகாக்க வேண்டும் என்று ஆனால் நீங்களோ தஞ்சையில் எஸ் டி பி ஐ வாரியத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்ற சமயத்தில் நீங்கள் அதே தேதியில் அதிராம்பட்டினத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று பொதுக்கூட்டம் வைத்துள்ளீர்கள் ஏன் என்ன காரணம் அதற்குத்தான் சொல்கிறேன் நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்
ReplyDeletePost a Comment