அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான மாண்புமிகு எஸ்.பி. வேலுமணி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை மஜக பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தனது மகனின் திருமண அழைப்பிதழை பொதுச் செயலாளரிடம் வழங்கி அழைப்பு விடுத்தார்.
மனிதநேய ஜனநாயக கட்சி நாகர்கோவிலில் நடத்திய 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எழுச்சியோடு நடைபெற்ற தென் மண்டல மாநாட்டை சிலாகித்து பாராட்டினார்.
இச்சந்திப்பில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் நேதாஜி நகர் அன்சாரி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் காஞ்சி ரபீக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மத்தியசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், துணைச் செயலாளர்கள் ஜுனைத், பஜார் அப்பாஸ், மேற்கு மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மெளலானா, துணைச் செயலாளர் செரியன் நகர் ஜலீல், துறைமுகம் பகுதி துணைச் செயலாளர் ஐபோன் அன்வர், மாணவர் இந்தியா துணைச் செயலாளர் ஜாஸிம், அனஸ், இக்பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அருமை ம ஜ க கன்னியாகுமரி
ReplyDeletePost a Comment