மத்திய அரசு நிதி வழங்காதபோதும் புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம் - மு.க.ஸ்டாலின்

 



மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் தற்போது பிரபலமாக உள்ளது.

மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.

நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நெல்லை வெள்ளத்தில் மிதந்த போதும் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி தரவில்லை. கேட்டது 37,907 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தது ரூ.276 கோடி. மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டாம்.

கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொடுக்கின்றனர்.

மத்திய அரசை குறை சொல்லிவிட்டு அமைதியாக இருக்காமல் புதிய திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.

நாளுக்கு நாள் புதிய திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது.

 மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் தற்போது பிரபலமாக உள்ளது.மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.


பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்து கொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்தார்


Post a Comment

Previous Post Next Post