மல்லிப்பட்டினத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.!



தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துமாணிக்கம்  ஏற்பாட்டில் மல்லிப்பட்டினம் ANB திருமண மஹாலில் நடைபெற்றது.ஒன்றிய அவைத் தலைவர் சாமிக்கண்ணுத லைமையில் நடைபெற்றது.

 தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, போராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார்,தொகுதி பொறுப்பாளர் சுப.சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 மாநில அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் பொது குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட கழக பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள் BLA2, பூத் கமிட்டி உறுப்பினர்கள் BLC நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து சிறப்பித்தனர் 

இறுதியாக மல்லிப்பட்டினம் கிளை செயலாளரும்,மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமது நன்றியுரை ஆற்றினார்





1 Comments

  1. இதில் எம்.பி கலந்து கொள்ளவில்லை

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post