முதல்முறையாக துபாயில் 13 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தமிழர் சாதனை..!

 


துபாயில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், உலகின் முன்னணி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் முகமது ரேலா தலைமையில் சிக்கலான மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தை பிறந்த நாளிலிருந்து மாலெக் பிலியரி அட்ரேசியா எனப்படும் அரிய நிலைமைகளுடன் அவதிப்பட்டு வந்தார். மேலும், குழந்தையின் தந்தை தனது கல்லீரல் ஒரு பகுதியை குழந்தைக்கு வழங்கினார்.

முதல்முறையாக துபாயில் 13 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதன் மூலம் துபாய் மருத்துவத்துறைகளில் ஒரு புதிய மைல்கல் பிரதிபலிப்பாக துபாய் சுகாதார ஆணையத்தின் உயர் அதிகாரி கூறினார். 

மேலும், இந்த குழந்தையின் அனைத்து மருத்துவ செலவுகளும் அல் ஜலீலா அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

Post a Comment

Previous Post Next Post