தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம், புதுமனைத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் இருவர் மத்திய அரசின், தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வில் தேர்வாகி உள்ளனர்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வில், மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வாகும் மாணவ, மாணவியருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
அவ்வகையில், கடந்த மாதம் நடத்தப்பட்ட தேர்வில் மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (தெற்கு) மாணவிகளான நூருல் ரிஃபா மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தேர்வாகி பள்ளிக்கும்,ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் பல வெற்றிபேற வாழ்த்துக்கள்
ReplyDeletePost a Comment