அண்மையில் மல்லி நியூஸ் வெளியிட்ட செய்தி எதிரொலியை பிரதிபலித்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி.
தஞ்சைமாவட்டம்,மல்லிப்பட்டினம்,சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களில் தூண்டில் வளைவு அமைப்பது சம்மந்தமாக பல ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கூட மல்லப்பட்டினம் கடற்பகுதியில் திடீரென அடித்த காற்றின் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமாகின,விசைப்படகு ஒன்றும் கடலில் மூழ்கியது, தூண்டில் வளைவு இருந்திருந்தால் இந்த பாதிப்பு வந்திருக்காது என்று மீனவர்கள் கூறியிருந்ததை மல்லி நியூஸில் வெளியிட்டு சட்டமன்ற உறுப்பினரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம், அனைத்து ஊடகங்களுக்கும் தகவலை கொண்டு சென்றோம்.
இந்நிலையில் தூண்டில் வளைவு குறித்து சட்டமன்றத்தில் இன்றைய மானிய கோரிக்கையின் போது பேசும்போது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்தார்,அதே போல சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு தூண்டில் வளைவு அமைப்பது குறித்தும் பேசி இருக்கிறார்.
Post a Comment