மல்லிப்பட்டினம் அருகே அரசுப்பேருந்து மோதி பள்ளி மாணவர் பலி.!

 


பேராவூரணி அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் தனிஸ்ராஜ் (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் ஆகாஷ் (வயது 15) இவர் தற்போது பள்ளத்தூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில், தனிஸ்ராஜ் பைக்கை ஓட்ட ஆகாஷ் பின்னால் அமர்ந்து பைக்கில், இன்று காலை பள்ளத்தூரிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்று சென்று கொண்டிருந்தனர். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பள்ளத்தூர் அருகே சொக்கநாதபுரம் பிரிவு சாலையில், முந்திச் செல்ல முயன்ற பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாரா விதமாக மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஆகாஷ் பலியானார். தனிஸ்ராஜ் லேசான காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

1 Comments

  1. இந்த சம்பவம் நேற்று நடந்தது

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post