அதிராம்பட்டினம் அருகே ரயிலில் மோதி அடையாளம் தெரியாதவர் உயிரழந்த சோகம்.!

 


தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியகாட்டில் அடையாளம் தெரியாத நபர் திருவாரூர்-காரைக்குடி  இரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு  ரயில்வே காவல்துறை அதிகாரிகள்,தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக்,மாளியக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வந்தனர். 

மேலும் இரயிலில்வே காவல் துறை உதவியுடன் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஐமுமுக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ரயிலில் மோதி உயிரழப்பது அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 







Post a Comment

Previous Post Next Post