பேராவூரணியில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க தமிழக முதல்வரிடம் விவசாயிகள் வலியுறுத்தல் !

 


நோய்களை கட்டுப்படுத்த பேராவூரணியில் முழுநேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பேராவூரணி பகுதியில் தென்னையை தாக்கும் பல்வேறு நோய் தாக்குதல்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த பேராவூரணி பகுதியில் முழு நேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தென்னை  விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இது குறித்து தென்னை உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவரும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளருமானா மல்லிப்பட்டினம் கமல் பாட்சா தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள முடிவில் குறிப்பிட்டிருந்ததாவது :

சென்னையில் வாடல் நோய், சிவப்பு கூன் வண்டு, ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட நோய்களால் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் தென்னை மரங்கள் அழிந்து வருகிறது. 

இதனால் தென்னை விவசாயிகள் வருமானம் இழக்கின்றனர். தென்னையைத் தாக்கும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பேராவூரணி தொகுதியில் முழு நேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அங்காடிகளில் குடும்ப அட்டைகளுக்கு பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தென்னை விவசாயிகள் பயனடைவார்கள் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post