தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க தினத்தையொட்டி கட்சி கொடியேற்றி உணவுகள் வழங்கப்பட்டன.
எஸ்டிபிஐ கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி மல்லிப்பட்டினம் கடைவீதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடியேற்றி கொள்கை கோஷங்கள் எழுப்பினர்.இந்நிகழ்ச்சிக்கு மல்லிப்பட்டினம் கிளை தலைவர் நூருல் இஸ்லாம் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் முகமது அஸ்கர் கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மேலும் துப்புரவு தொழிலாளர்கள்,தினக்கூலிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
Post a Comment